பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை குறைக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜுன் 20, 2023 - 11:00

அதன்படி, பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாயால் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஊடகங்களுக்கு நேற்று (19)கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோதுமை மாவின் விலை

மேலும், கோதுமை மாவின் விலை தொடர்பில் அவர் கூறுகையில், கோதுமை மாவின் விலை 430 ரூபாயாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170, 160 ரூபாயாக காணப்படுகின்றது.

தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம்.

எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!